Sunday, April 11, 2010

ஏன்

ஏனென்று கேளுங்கள்
அனைத்தையும்
அதிகம் தெரியாதவர்கள்
அப்படிக் கேட்பது
அவசியம்
அதற்கு பதிலிறுக்க
அநேகம் பேர்
ஆனால்
அவர்களுக்கு
அந்தப் பதில் தெரியாது
அது ஏனென்று
அவர்களிடம் கேளாதீர்கள்
அது தவறான இடம்
அக்கேள்விக்கு வேறு பேர்

எப்பொழுதும்
எப்படியும்
ஏனென்று கேட்பது
அனாவசியம்
என்று மட்டும்
எண்ணி விடாதீர்கள்

ஆகவே
எப்பொழுதும்
ஏனென்று கேளுங்கள்
இந்தக் கவிதையைப் போல

- 08 / 09 / 92

1 comment:

dondu(#11168674346665545885) said...

ஏன் ஏன் என பல கேள்விகளை மகன் கேட்க

எல்லாவற்றுக்கும் தெரியாது தெரியாது என்றே பொறுமையுடன் தந்தை விடை கூற

சலித்த மகன் கேள்வி கேட்பதை நிறுத்த

கேள்விகளை நிறுத்தாதே மகனே

அவற்றால்தான் அறிவு வளரும் என தந்தை அறிவுறை கூற

மகனின் இளமை கழிந்தது


அன்புடன்,
டோண்டு ராகவன்

Pandit Venkatesh Kumar and Raag Hameer