மற்றொரு நாள் கழிந்தது
தனிமையில் நான் இன்னும்
எப்படி இது கூடும்
என்னுடன் நீ இல்லாத இத்தனிமை
நீ விடை பெறவுமில்லை
யாரேனும் இது ஏனென்று
கூறுங்கள்
நீ போகத்தான் வேண்டுமா
என்னுலகை குளிர்க்கடலில்
ஆழ்த்தி விட்டு
தனியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்
எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது
ஏதோ என் செவியில்
கூறும் சேதி
நீ தனித்து வாடவில்லை
உன்னுடன் நானிங்கு
எங்கோ வெகு தொலைவில் நீ
ஆயினும்
உன்னுடன் நானிங்கு
ஆயினும்
உன்னுடன் நானிங்கு
தூரங்கள் நம்மை பிரித்தாலும்
என் நினைவில்
நீ மட்டுமே
எனவே
நீ தனிமையில் வாடவில்லை
என்பதை நானறிவேன்
அன்று மற்றொரு இரவு
என்னை உன்னருகில்
வரவழைத்து
நேசத்துடன் அணைக்க வேண்டியதாய்
உன் கண்ணீர்க் குரலை
கேட்டதோர் உணர்வு
உன் வேண்டுதலை
மன்றாடலை நான் கேட்கிறேன்
என் தோள் தாங்கும்
உன் சுமைகள் அன்பே
ஆயினும்
முதலில் உன் கரத்தை
பற்றிக் கொள்ள
அனுமதி
தனியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்
எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது
என் நேசத்தை அறிவாய்
என நீ உணர்ந்தாலும்
போதும் அன்பே
உடன் உன்
அருகிருப்பேன்
உன்னுடனிருப்பேன்
(மைக்கேல் ஜாக்சனின் 'You Are Not Alone' என்ற பாடலின் மொழியாக்கம்...)