Monday, July 14, 2025

இருப்பு

இருப்பு 

ஆறறிவோடு ஒன்றிரண்டு 
சேர்ந்தால் என்ன குறை 
குறைந்தால் என்ன நிறை 
மலைக்காற்று வீசாத 
மாலைகளில் இதென்ன விசாரம் 
நடந்து நடந்து 
நடந்து நடந்து 
குப்பை உழன்று 
நரகல் தின்று 
கால்மடித்தமர்ந்து 
மலையைப் பார்த்தால் 
வீசுது காத்து 
கூடுதேடி மடியேறி 
வருது ஏதோவொரு அறிவு 

எனக்கெதற்கு இதெல்லாம் 
நாளெல்லாம் நானும் நீயும் 
இப்படியே இருந்துவிட்டால் என்ன   
குறையும் நிறையும் 
அறியும் அறிவு 
காற்றையும் நரகலையும் 
விளக்கிடாதபோது 
விலக்கி விடாதபோது

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...