கடப்பதற்காக
ஏற்றுக் கொண்ட
தூரங்கள்
கடமைகளின் காயங்கள்
கடந்து போன கவலைகளின்
காய்ந்து போன வடுக்கள்
இற்று விழும் நேரம்
உற்ற துணை யார்
இரசனைகள்
இரசனைகளின் விளிம்புகள்
வரையறுக்க பட்டவையா
அதன் வீச்சுகள்
வகிரும் கோணம் என்ன
ஆழ்ந்த புரைகளில்
புழுக்கள் நெளிய
நிர்ப்பந்த அடிகள்
குருதி தெறிக்கும்
வலியாற்றும் விடை
இரசனை
அணையவிருந்த அக்கினியை
வளர்த்துவிட்ட பொறிகள்
மறையவிருந்த ஒளியை
இழுத்து நிறுத்திய துருவங்கள்
ஒவ்வொரு கடலின்
ஆழமும்
அளக்கப்பட்டவை
அளந்த நிறைகளில்
வேறுபாடு கானலும்
அதிக ஆழம்
நிறுத்தலும்
குறித்தவை தக்கவை
அல்லவெனாலும்
எமக்கே உரியவை
ஆழத் தேடலின்
அழுத்த வேதும்பல்களில்
அடுத்த கடலுக்கு
அலை பாய்தலும் உண்டு
துணை இல் தனிமையும்
தனிமையின் துணையும்
அழுத்திக் கிழித்த ஊனங்களும்
அணைத்துத் திளைத்த ஆனந்தமும்
இரசனை
வாழ்வில் கடக்கும் எவ்வொரு கணமும்
வெறுக்கத் தகுந்ததல்ல
வெளிப்பாடு எதுவாயினும்
இரசிக்க மறுத்து விடாதே
அதுவே
நீ நான் தேடிக்கொண்டிருந்த
இரசனையாக இருக்கக் கூடும்
அதுவே
உன் என் கடைசி
இரசனையாகவும்
இருந்துவிடக் கூடும்
- 13/10/86
No comments:
Post a Comment