Sunday, June 24, 2012

மூன்றாம் நாள் உயிர்ப்பு



என் மிச்சங்கள் வேண்டும்
இயேசுவின் கை
அப்பத் துணுக்குகள்
பெருக என்னை
விதையுங்கள்

எல்லாச் சிலுவைகளிலும்
என் குருதி
அத்தனைத் சிரசுகளிலும்
என் முள் கிரீடங்கள்

தவமே இதுவும்

விலாக்காயம் பெருகிவோட
மகிழுங்கள்
கவிழ்த்த மதுக்கோப்பையில்
சாறு பருகி
அப்பம் தின்று
மிச்சம் வீசட்டும்
உங்கள் கைகள்

என்னறிவு யாருக்கென
பகடையுருட்டி
பங்கிடுங்கள்

மிச்சம் பொறுக்கும் கைகளுக்கும்
மீதம் வையுங்கள்

ஆயினும்
கைகழுவி விடாதீர்
என் நண்பரே
உம் கைகளை
அந்தப் பிலாத்துவைப் போல்

- 9/10/89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer