மலட்டுப் பறை முழக்கி
முரண்ட கை பொத்தும்
நார் தேடி உதிர் பூக்கள்
அரற்றும் மணம்
கனவுக் கடைவீதியில்
தொலைந்து போன இது
என் விளி
வருணன் பொய்த்து
வான் நோக்கும்
நனவுப் புழுக்கங்கள்
கிழிந்த சேலையின்
ஊசி நூல் துணுக்குகள்
எச்சில் ஒழுக
திகைத்த குழந்தை
அரற்றும் இறுதியில்
அழும்
விழி வழி வழியும்
விளி
விலாசம் தேடி
விரையும்
விளைவெனில்
வினைஎது
எப்புரையின் குருதி
எவர்கைத் தீர்மானம்
தூரிகை நாரென
கண்ணீர் குழைத்து
உணர்ச்சியற்று பூசி
உன் படம் எழுதும்
உதாசீனப் படுத்து
உவகை கொள்
செவி நிறை
சென்று மறை
ஆயின்
கண்ணீர் நாக்கு உன்
காதுளற
விடை விளித்து போ
என் விளியே
- 8/10/89
No comments:
Post a Comment