Monday, May 3, 2010

பிரியும் சிறகு

சிறகொன்று பிரிகிறது

வலி பொறுக்கும்
பறவைக்கு
தூரமே இலக்கு
உதிர்ந்து விழும்
சிறகுகள்
தூரத்தை
அளந்து விட முடியாது
உதிரம் வழிந்தோட
கீழ் அடித்துப் புரண்டோடும்
வெள்ளக் காற்றில்
சுழன்று மறையும்
சிறகு

செஞ்சிவப்புக் கோளத்தின்
செம்மை வயல்கள்
சிறகுதிர்ந்த மேனிக்கு
சுகம் தருமெனும்

சிறகனைத்தும் உதிர்ந்தாலும்
கால்களால் காற்றை
விரைந்து சாடுகின்ற
வன்மை மனதிலூறும்

உயிர்வரை
உடலொட்டும் சிறகொன்று
நின்றிருக்கும்
நம்பிக்கையில் பறவை

அதுவரை
உதிர்கின்ற சிறகெல்லாம்
யார் சிரசிற்கோ

- 17/07/90

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer