Sunday, July 26, 2009

ஆடும் கூத்து


"அன்னை அன்னை ஆடும் கூத்தை
நாடச் செய்தாய் என்னை..."

ஆடும் கூத்திது ஆடிக் களிப்போம்
எங்கே பிறந்த பாவம் தாளம்
மனிதம் தேடும் கூத்தின் சாரம்
திரிபுர சடையன் ஆடிய கூத்தின்
எஞ்சிய எச்சம் இன்னும் தொடரும்
உற்றது பிரிந்தும் உள்ளது தொடரும்
ஆடும் கூத்தை நாடி ஆடும்

அற்றது கண்முன் கண்டும் உணரா
கற்றது கேட்டது எதுவும் உதவா
முதலும் முடிவும் ஆடும் கூத்தே
உனதும் எனதும் அதுவே அதுவே
அணுவில் துளியில் ஒளியில் மழையில்
புலனில் புவியில் அறிவில் இசையில்
எதிலும் எதிலும் ஆடும் கூத்தே

ஆடி அடங்கி மறைந்து ஒடுங்கி
உருவம் களைந்து அருவம் அடையும்
உயிரும் விட்டுப் போகும் இன்னொரு
உடலின் வித்தாய் ஆடும் கூத்து
சுடரில் துடிக்கும் நரம்பில் இசைக்கும்
ஒளியின் இசையும் இசையின் ஒலியும்
அறிந்தால் அறிவோம் இன்றேல் மறவோம்
சிவமே பரமே ஆடும் கூத்தே

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer