Sunday, July 26, 2009

அடவு










பிசிறுகளோ
பிறழ்வுகளோ
நிகழ்வதேயில்லை
அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட
அற்புத அடவுகளில்
வளைந்தும் நெளிந்தும்
துரிதமாய் ஒரு
தேர்ந்த நர்த்தகியைப் போல்
விரைகிறது
காலம்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...