கனவுகள்
உதிர்ந்து கிடக்கும்
சாலையில்
உன் காலடி
புதையுறும்
பூக்களின்
இதழ் நிறங்கள்
உன் பாத சிவப்பை
ஒற்றாவா?
காற்றில்
மிதந்து திரியும்
மகரந்தம்
உன்
சுவாச நறுமணம்
பற்றாதா?
இழக்க பெறாமல்
கைமிஞ்சும்
யாசகனின்
காசுகள் போல்
இறுகி கிடக்கும்
அந்தரத்துக்குள்
இன்று
உடையும்
மகரக்கட்டு
No comments:
Post a Comment