உணர்வுகள் பிறழ்ந்து
விழிகளும் வெறிக்கும்
இவன்முன்
இருள்திரை விலக்கா
மன உறவுகள்
சொல்லிற் சிதையும்
நட்புகள்
அந்தகாரம் சூழும்
மினிச்சுடர் அற்ற அந்த பார்வையின்
நாசியோடும் இழைக்காற்றை
உறிஞ்சி விட்டாலும்
தெரியாத இவனுக்கு
முன்பின் தடம் புரளும்
கவிதை
இதுவென்று மட்டும்
தெரிந்து விடுமா
No comments:
Post a Comment