
"எங்குமுள யாங்கனுமில"
ஆவேசங்கள் அவையறியும்
வழுவிச்செல்லும்
காலத்தின்
சிதைந்த பக்கங்களில்
வண்ணத்து பூச்சியின்
பதிவற்ற தடங்கள்
பெருமூழியின் பிம்பங்களென
அவைதம் இருப்பை
உறுதி செய்யும்
மறைக்கப்பட்ட
விந்து குருதி கண்ணீர்
உணரும் வன்மையன
உண்டென்னும் சிலர்
அன்றென்னும் பலரிடையே
நதிவிழுந்த பிண்டங்களில்
நீர் துடிப்பது போல்
நினைவின் சுழல்களில் நிலைத்து வாழும்
No comments:
Post a Comment