Sunday, September 6, 2009

நாம்

கலைந்த படுக்கையில்
ஆழ்ந்துறங்கும் நீ

சன்னலோரம்
புலரும் இருள்

கண்ணாடியில் மேசைவிளக்கின்
மஞ்சள் பிம்பம்

உன் வெம்மையை
போர்த்தியபடி
இந்தக்கவிதை
எழுதும் நான்

பெருகி


View !
Originally uploaded by shabgarde paezi ...
கொதித்துத் தகதகக்கிற
கடல்
பார்த்து அமர்ந்திருந்தோம்
பேசுவதற்கு
ஒன்றுமில்லை
என்றாலும் உணர்கிறோம்
காமம்
ஏனிப்படி
நுரைத்து வழிந்து
பெருகித் தளும்பி
பாதம் சீண்டுகிறது
என

காட்சி


solitary
Originally uploaded by totomai
உறக்கம் கலைந்த
இரவொன்றில்
நீயற்ற தனிமை
கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
நானிழந்த
உன் சுவாசம்
சாளரத்தின் வெளியே-
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒளிபெறும்
துயரக்காட்சி
அரங்கேறும் வெளி
அழைக்காத
கைபேசியும்
நானும்

உன் போல்


VALISES OUBLIEES
Originally uploaded by Boccacino
சினம் கொண்டிருக்கிறோம்
இருவரும்
வெவ்வேறு காரணங்களுக்காக
மடி சாய்ந்திருக்கும்
தலைகோதா
உன் விரல்களின்
கோபம் புரிகிறது
ஆனாலும்
தரையூன்றியிருக்கும்
உன் கைவளைகள்
ஏன் சிணுங்குகின்றன?

ஏற்பு


Tear!
Originally uploaded by ::: *TearS* :::
இழப்பொன்றை எண்ணி
மறுகுகிறாய்
அமைதியாய்
பார்த்திருக்கிறேன்
ஒற்றைவரி விசும்பலொன்று
உன் கன்னத்தில்
எழுதப் பெறுகிறது
துடைக்காமலும்
காத்திருக்கிறேன்
அதை
என்
உள்ளத்தில் ஏந்தவென்று

இயைவு



கைகோர்த்து நடக்கிறோம்
என் மன அழுத்தங்கள்
உனக்குள் பரிமாறிவிடாதபடி
தற்காத்து கொள்கிறேன்
விரல்களின் அதிர்வில்
கேட்கிறாய்
என்ன துன்பமென

Sunday, August 30, 2009

Lie? Or truth? (An inquisition into Presence)


Those which stand, walk, fly! – Are you
All living things a dream? – Or illusions thy?
All that is learnt, heard, considered! – Are you
All mere images? – How dense are thy fraught?

Blue sky, Tender sunlight, Forests – Are you
All mirages? – Or result of confused vision?
As sunken in the dreams are the bygone knowledges
Am I too a dream? – Or this world a lie too?

Time and perspective as factors of thoughts
Are their manifestations lies? –Their characteristics lies too?
As trees are born of seeds, hence are forests lie too?
Does it merit for us to think?

If what is seen could be hidden,
Is it not possible for the hidden to be seen?
Whatever seen is present; what is not is not
What is seen is Shakti – The Eternal!

(Translation of Mahaakavi Bharathi’s poem "Poiyo? Meiyo?")

Pandit Venkatesh Kumar and Raag Hameer