Thursday, January 28, 2010

ஞான திருஷ்டி

தெய்வத்தைப் பார்க்க
அன்று கிளம்பியவன்
மலையும் நதியும் தேடி
கடலும் கரையும் தேடி
எங்கும் காணாமல்
உள்ளுக்குள் உற்றுப்
பார்க்கச் சொன்னவனை
நம்பி
நிஷ்டையிலாழ்ந்தான்
திருஷ்டி
உட்புறம் குவிந்தும்
யாருமறியாமல்
குடும்பம் பெருகி
குழந்தைகள் வளர்ந்து
சம்சாரம் மட்டும்
சிக்கலில்லாமல்
அனுதினம் தோன்றி
கொண்டிருக்கிறது
என்றாவது ஒருநாள்
உட்புறம் குவிந்தது
வெளிப்புறம் விரிந்தால்
தெரிந்து விடலாம்
ஒருவேளை

1 comment:

வெள்ளிநிலா said...

pls read my blog and send your address if you have interst-thanking you !

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...