ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங்கள் மற்றும் மக்கள் விரும்பிய பாடல்களில் அவரின் பங்களிப்பு என பற்பல வகைகளில் பகுத்திருக்கக் கூடும்.
நானும் என் மனதுக்கு பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களை தொகுத்திருக்கிறேன். இந்தத் தொகுப்புக்கு மேற்கூறிய எவ்வித மேதைமை பொருந்திய அளவீடுகள் இல்லை. இவை முழுக்க முழுக்க என் கணிப்பில், என் ரசனையின் குறைபட்ட வட்டத்துக்குள் என்னை மகிழ்வுடன் உலவ வைத்த தனித்துவம் கொண்ட பாடல்கள் மட்டுமே.
எனக்குப் பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களின் பட்டியல்
- என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில - சின்ன பசங்க நாங்க
- சின்னத்தாயவள் தந்த ராசாவே - தளபதி
- மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி, ராஜாவுடன்
- நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம்
- ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை
- தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே -
- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் - அவள் ஒரு தொடர்கதை
- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
- வைதேகி ராமன் கை சேரும் காலம் தை மாத நன்னாளிலே - பகல் நிலவு
- நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை - பாலூட்டி வளர்த்த கிளி
- கனவோடு ஏங்கும் இளம் பூங்கிளி - அன்பே ஓடி வா
- மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு - பதினாறு வயதினிலே
- புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை
- பூவே பனிப் பூவே நானும் மலர் தானே -
- நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே - ஆத்மா
- கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்
- எண்ணத்தில் ஏதோ சில்லென்றது - கல்லுக்குள் ஈரம்
- செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே
- குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் - கவிக்குயில்
- அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - சிட்டுக்குருவி
- தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் சிந்தும் - நிழல்கள்
- என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
- பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் - கழுகு
- ஓலைக்குடிசையிலே பழஞ் சேலைக்குள் - ஆனந்த்
- அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாச பறவைகள்
- எந்தப் பூவிலும் வாசம் உண்டு - முரட்டுக் காளை
- அன்னக்கிளி உன்னத் தேடுதே - அன்னக்கிளி
- மச்சானப் பாத்தீங்களா - அன்னக்கிளி
- பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் -
- நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்
- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானி
- வசந்தக் கால கோலங்கள் - தியாகம்
- நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஆவாரம்பூ
- பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்
- இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - கொக்கரக்கோ
- தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
- வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் - முதல் மரியாதை
- நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
- தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு
- உள்ளம் எல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குளே ஏதேதோ - தூரத்து இடி முழக்கம்
- சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி
- எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
- சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்
- ஏதோ மோகம் ஏதோ தாகம் - கோழி கூவுது
- நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில்
- காற்றுக்கென வேலி கடலுக்கென்ன மூடி - அவர்கள்
- இப்படியோர் தாலாட்டு பாடவா - அவர்கள்
- நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும்
- பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவில் ஒரு சங்கீதம்
- போட்டேனே பூவிலங்கு - பூவிலங்கு
- வான் மேகங்களே வாழ்த்துங்கள் - புதிய வார்ப்புகள்
- அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை
- மௌமான நேரம் இள மனதில் என்ன பாரம் - சலங்கை ஒலி
- பால கனகமய - சலங்கை ஒலி
- தேவன் கோயில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்
- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - தூறல் நின்னு போச்சு
- உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே
- அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்
- வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் வேண்டும் - அவள் அப்படித்தான்
- நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
- தேனருவியில் நனைந்திடும் மலரோ - ஆகாய கங்கை
- மலர்களே நாகஸ்வரங்கள் மங்கள தேரில் - கிழக்கே போகும் ரயில்
இந்தப் பட்டியலை எழுதி முடித்துப் வாசித்து பார்க்கையில் சில குறிப்புகள் தோன்றுகின்றன:
- ராஜாவின் இசையில்தான் ஜானகியின் குரல் வளம், வீச்சு மற்றும் நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கிறது மற்றும் ராஜா ஜானகியின் திறமையை மிக ரசித்து, தெரிந்து அவரை பாட வைத்திருக்கிறார்
- ராஜா ஜானகிக்கென்றே பாடல்களை உருவாக்கி தந்திருக்க வேண்டும்
- வெற்றி பெற்ற ஜானகியின் பாடல்கள் இரண்டு மூன்று பாடல்களாக சில வெற்றி பெற்ற படங்களில் இடம் பெற்றிருக்கின்றன - அவர்கள், கவிக்குயில், தளபதி, உல்லாசப் பறவைகள் - இப்படி
இவற்றில் ஒவ்வொரு பாடலுக்கான என் சுய அனுபவ குறிப்புகளுடன் எழுத வேண்டுமென்ற ஆவலிருக்கிறது. பார்ப்போம்.