Sunday, June 29, 2008

நீ


என் அம்மை நீ
என் அப்பன் நீ
தம்பி நீ, அண்ணன் நீ
தங்கை நீ, தமக்கை நீ
மனைவி நீ, நல்ல துணைவி நீ
மகள் நீ மகன் நீ
இல்லறம் நீ பொருள் நீ
இன்பம் நீ அளவிலா துன்பம் நீ
தீதிலா நட்பும் நீ
முன்னம் நீ, பின்னம் நீ
கண்ணீரும் நீ களியும் நீ
என் தெய்வம் நீ

அவை


"எங்குமுள யாங்கனுமில"
ஆவேசங்கள் அவையறியும்
வழுவிச்செல்லும்
காலத்தின்
சிதைந்த பக்கங்களில்
வண்ணத்து பூச்சியின்
பதிவற்ற தடங்கள்
பெருமூழியின் பிம்பங்களென
அவைதம் இருப்பை
உறுதி செய்யும்
மறைக்கப்பட்ட
விந்து குருதி கண்ணீர்
உணரும் வன்மையன
உண்டென்னும் சிலர்
அன்றென்னும் பலரிடையே
நதிவிழுந்த பிண்டங்களில்
நீர் துடிப்பது போல்
நினைவின் சுழல்களில் நிலைத்து வாழும்

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...