Sunday, February 5, 2012

எச்சம்

அவனை
அதற்குமுன் பார்த்ததில்லை

அலுவலகம் செல்லும் வழியில்
அறிமுகமானதும்
நெடுநாள் நட்பு போல்
பேசிக் கதைத்து

பேசிய கணங்கள்தோறும்
அவன் புன்னகையே
கூர்ந்து நின்றேன்

பெயரோ உடையோ
நினைவில் நில்லாதபடி
படர்ந்துநின்ற
கபடற்ற இயல்பான
புன்னகை


நிறுத்தம் வந்து
நின்ற பேருந்திலினின்று
இறங்கி மறைந்தும்
அணிவாரற்று
தொக்கி நிற்கிறது
ஊரும் பெயருமறியா
அந்தப் புன்னகை

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer