Sunday, September 6, 2015

Singapore 50 - A Few Snaps Around










ஹாங் காங்கின் அயல் நாட்டு வேலைக்காரி



ன்றொரு ஞாயிற்றுகிழமை
நூறாயிரம் ஆயிரம்
நாடும் வீடும் மறந்த
இல்லப் பணிப்பெண்டிர்
உலகாண்ட விக்டோரியா பேரரசியின்
பேர் தாங்கும் பூங்காவிலும்
சாலையோர நடைபாதைகளிலும்
கூடும் நாள்

வண்ணங்கள்
உடைகள்
ஒப்பனைகள்

சரசங்கள்
உரசல்கள்
பூசல்கள்
உறவுகள்

நின்றும் அமர்ந்தும்
படுத்தும் நடந்தும்
பேசியும் எதையோ
தேடியும்


















தீராத பார்வைகள்
ஓயாத தவிப்புகள்

அத்தனையும்
வெட்ட வெளியில்
காட்சிப் பொருளாக

அத்தனையாயிரம்
உடலங்களின்
ஒன்றிணைந்த
உணர்ச்சிக்குவியலும்
நடைபாதை குப்பைகளூடே
ஒரே பெரும்
முலைச் சுரப்பாக
யோனி கசிவாக
விழி நீராக 

Sunday, April 26, 2015

நானெழுதிய வெளிவராத திரைப்பாடல்

நீ நான் ஏன்
பொல்லாத  இன்பங்கள் கொண்டாடும்போது

ஆண்:

இவள் இதழ் அது சிந்தும் துளியில்
இதோ இதோ உன் காலடியில்
அவள் விரல் அது அசையும் திசையில்
உயிரே உயிரே போய் விடு போ

இவள் அங்கம் என் தேகம் தீண்ட
விலை விலையென உயிர் பிரிவேன்
அவள் மேலென் வாசம் விரவ
பாதங்கள் மேவிட உடல் விரிப்பேன்

சரணம் 1

வா என் வாசல் வந்து
நீ காத்திரு
என் என் தேவை தந்து
நீ வேர்த்திரு
நான் ஓர் வேகம் கொண்ட
தீ காட்டுத்தீ
ஆண் தேகம் அது எல்லாம்
நுனி புல் நுனி
நீ - என் பார்வை பட்டு
நீ - என் வாடை சுட்டு
நீ - என் பாதம் தொட்டு
வா ஒரு ராமனா





விடுமுறை விடுகதை

சனி ஞாயிறு காலைப் பொழுதுகள்
ஏன்
சனி ஞாயிறு காலைகளைப்
போலிருக்க வேண்டும்
வார நாட்களில்  எப்போதாவது
வரும்
விடுமுறைகளின் காலைகளைப்
போல் ஏன்
இருக்கக் கூடாது 

Sunday, January 11, 2015

பாலி ஒரு பூ

விமானமிறங்கி 
ஊருக்குள் நுழையுமிடம் 
வீதியின் இருமருங்கிலும் 
கவியும் இலையடர்த்தியில் 
மென்மணம் பரப்பி 
வரவேற்கிறது 


தங்குமிடம் சேர்கையில் 
வரவேற்க காத்திருப்போரில் 
புன்னகைத்து வீற்றிருக்கிறது 

உள்ளே நுழைகிறீர்கள் 
உச்சகட்ட கொதிப்பில் 
மணியாரத்தை கழற்றி வைக்குமிடம் 
மலர்ந்திருக்கிறது ஒரு பூ 

மனைவியின் மேனி வாசம் 
அறைக்கு வெளியிருக்கும் உங்களை  
உள்ளிழுக்கும் பொது 
வெண்ணிற மெத்தையின் நடுவே 
கிடந்தது கிறக்குகிறது 

மாலை கவிந்ததும் 
நாதம் கலந்து உலவும் 
குளிர் காற்றில்  
சுகந்தம் சேர்ந்து கமழ்கிறது 

குளியறையில் 
உணவருந்தும் விடுதியில் 
கடைகளின் பேர மென்னிரைச்சலில் 
ஏறித் தீராத 
மிக அழகிய கோவில்களில் 
காலை பூசைக்கு 
அணிவகுத்துச்  செல்லும் 
பேரழகிகளின் தட்டங்களில் 
பூசனை தீர்ந்து 
திரும்பும் பேரழகிகளின் 
கூந்தல்களில் என 
எங்குமிருக்கின்றன 




உங்களுக்குள் என்றுமிருக்கும் 
புன்னகையை 
மகிழ்ச்சியை 
உங்கள் முன் நிறுத்தும் 


பாலி ஒரு பூ 

Uluwatu Sunset Temple


Pandit Venkatesh Kumar and Raag Hameer