Monday, June 10, 2019

சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

இறந்துவிட்டதாக முற்றாக

அறியப்பட்ட நண்பனொருவனின்
முகநூல் பக்கம் சிலநாட்களில்
உயிர்தெழுந்தது
விவாதங்கள் நிலைச்செய்திகள்
வாழ்த்துக்கள் ​​
அனைத்தையும் வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு
அவனது இறந்ததின
கண்ணீர் அஞ்சலி தோன்றி
சகிக்க முடியாமலாகியபோது
கண்டுபிடித்தோம்
அவன் மனைவி
அவன் நினைவில்
முகநூலில் எங்களுடன் பேசியது
பள்ளிக்கூட நண்பர்களின்
வாட்ஸப் குழுவில்
நண்பனொருவனின் எண்ணிலிருந்து
நள்ளிரவில் செய்தி
இன்னாரின் மகன் எழுதுகிறேன்
அப்பா இறந்து விட்டாரென
ப்ரொபைல் படத்துடன்
அவன் மரண செய்தி
எப்படி எதிர்கொள்வது
தொழில்நுட்பம் கொணரும்
புத்தம்புது பிரச்னைகளை
புரியாத இறப்புச் செய்திகளை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - ​சோஷல் மீடியாவும் சில மரணங்களும்

Pandit Venkatesh Kumar and Raag Hameer