ஆறறிவோடு ஒன்றிரண்டு
சேர்ந்தால் என்ன குறை
குறைந்தால் என்ன நிறை
மலைக்காற்று வீசாத
மாலைகளில்
இதென்ன விசாரம்
நடந்து நடந்து
நடந்து நடந்து
குப்பை உழன்று
நரகல் தின்று
கால்மடித்தமர்ந்து
மலையைப் பார்த்தால்
வீசுது காத்து
கூடுதேடி
மடியேறி
வருது
ஏதோவொரு அறிவு
எனக்கெதற்கு
இதெல்லாம்
நாளெல்லாம் நானும் நீயும்
இப்படியே இருந்துவிட்டால் என்ன
குறையும் நிறையும்
அறியும் அறிவு
காற்றையும் நரகலையும்
விளக்கிடாதபோது
விலக்கி விடாதபோது

