Sunday, December 14, 2008


நோவாவின் படகு
நீயற்ற நிதர்சனம்
எரியும் ஹைட்ரஜன்
தீர்ந்த அந்திம சூரியனாய்
சுருங்கும் வாழ்வின் கணங்கள்
நேரப் போகும்
குளிர்ப் பாலையின்
முதல் ஊசிகள்
செருகப்பட்டுவிட்ட
என் கண்ணீர் படிந்த
மிக நீள் இரவுகளில்
மோத ஆருமற்று
வெறுமைகளால் நிறைந்து
அலையும்காற்று
நீ எனக்கிட்ட
அந்த
முதல் முத்தத்தின்
வெம்மையிலும் ஈரத்திலும்
விளைந்து விடாதா
அழிந்து விட்ட
இந்தவுலகின்
முதல் உயிர்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer